பாண்டிய நாட்டில் பரமன் திருவிளையாடல்கள்

பாண்டிய நாட்டில் பரமன் திருவிளையாடல்கள்
செவல்குளம் ஆச்சா அவர்கள் எழுதியது.
வைகறைப் பொழுதில் பரிகளாக மாற்றப்பட்டிருந்த நரிகள் அனைத்தும் பழையபடி நரிகளாகிவிட்டன.குதிரை லாயத்தில் பிணைத்திருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டு அங்கிருந்த குதிரைகளையெல்லாம் கடித்துக்குதறி அவற்றின் குருதியைக் குடித்து ஊனைத்தின்றன.பின்னர் அங்குமிங்கும் தாறுமாறாக ஓடி ஊளையிடத் தொடங்கின. குதிரைகள் கட்டப்பட்ட இடத்திலிருந்து நரிகளின் ஊளைச் சத்தம் கேட்பது கண்டு திடுக்கிட்ட காவலர்கள் லாயத்துக்குள் சென்றனர். நரிகள் காவலர்கள் மீதும் பாய்ந்து கடித்துக் குதறத் துவங்கின.
பின்னர் அங்கிருந்து வெளியேறி ஊளையிட்டுக்கொண்டே வீதிவீதியாக அலைந்தன. அவற்றைக் கண்ட மக்கள் பதறியடித்து வீட்டுக் கதவுகளை அடைத்துக்கொண்டனர். நகரையே கிட்டத்தட்ட பாழ்படுத்திவிட்டு விடிவதற்குள் அருகில் உள்ள காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டன.நடைபெற்ற நிகழ்வுகளையெல்லாம் அறிந்த பாண்டிய மன்னன் திகிலடைந்தான்.
இதுபோன்ற பரமனின் திருவளையாடல்கள் உள்ளே....