பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்

பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
மனித நுண்ணறிவுச் செயல்திறன்கள் பல இருக்கின்றன; அவை தனித்து இயங்குகின்றன என்பதை ஹாவர்ட் கார்டனர் விளக்குகிறார். கார்டனர் முதலில் ஏழுவகை நுண்ணறிவுகளைக் குறிப்பிட்டார். அவை: மொழி நுண்ணறிவு, இசை நுண்ணறிவு, தர்க்க கணித நுண்ணறிவு, இட-வெளி நுண்ணறிவு, உடலிக்கிய நுண்ணறிவு, இரண்டு தனிப்பட்ட நுண்ணறிவுகள். அவற்றோடு பின்னர் இயற்கை நுண்ணறிவையும் சேர்த்தார். இவை ஒவ்வொருவரிடமும் குறைந்த அளவிலோ அதிகமாகவோ இருக்கும். அவற்றை வளர்க்கவும் வலுப்படுத்தவும் முடியும். கல்வி இவை அனைத்தையும் வளர்க்கவேண்டும்.
பல்வகை நுண்ணறிவுக் கோட்பாட்டை வகுப்பறை செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும்போது, ஆசிரியா்கள் கற்போரில் பலவகைப்பட்டவா்கள் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அந்தந்த நுண்ணறிவுகளை வலுப்படுத்த வாய்ப்பளிக்க முடிகிறது. அப்போது ஒவ்வொரு மாணவரும் அவருக்கு விருப்பமான, அவரிடம் மேலோங்கியிருக்கும் நுண்ணறிவை வளப்படுத்திக் கற்று வெளிப்படுத்த முடியும்