ஒரே ஒரு எம்.ஜி.ஆர்

ஒரே ஒரு எம்.ஜி.ஆர்
àெரலாற்றில் காலத்துக்கும் அழியாத கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் அரசியல், சமூகம், கலை என்ற முப்பெரும் களத்தில் வேறு எவராலும் முறியடிக்கப்படாத சாதனைகளைச் செய்தவர் எம்.ஜி.ஆர். ஒருவரே. அவர் அமரராகி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் இன்னமும் தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர். புகழும் நினைவும் கொடிகட்டிப் பறக்கிறது.
மூத்த பத்திரிகையாளர் துரை. கருணா அந்த ஒப்பற்ற சந்திரனைப் பற்றி வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ ஆச்சரிய சம்பவங்களை, தகவல்களை 'புதிய தலைமுறை' வார இதழில் "ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் சுவாரஸ்யமாக எழுதி வந்தார். நூறு வாரங்களுக்கும் மேலாக வாசகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்ற கட்டுரைத் தொடர்தான் இந்த சிறப்புமிக்க நூலாக வெளிவருகிறது.
தமிழ் மக்களின் மனங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர். பற்றிய ஆச்சரிய தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த 'ஒரே ஒரு எம்.ஜி.ஆர். நூல் இளைய தலைமுறைக்கு வெற்றிப் பாடமாக திகழ்ந்திடும், மூத்த தலைமுறைக்கு மீள்நினைவுகளா இனித்திடும் என்பது நிச்சயம்,