ஆண்களின் அந்தரங்கம்

ஆண்களின் அந்தரங்கம்
ஆண்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்களை எப்படிப் புரிந்துகொள்வது? இந்த ஆண்கள் ஏன்தான் இப்படி நடந்துகொள்கிறார்களோ என்று வருந்தாமல். அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்கான காரணத்தைக் கண்டறிய முடியுமா? ஆண்கள் பிடிவாதக்காரர்களா? காதலை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாதா? ஆண்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டக்கூடாதா? ஆண்களின் ஈகோவை காயப்படுத்துவது ஆபத்தா? பெண்கள் காலம் காலமாக கேட்டு வரும் கேள்விகள் இவை. ஆண்களைப் பெண்கள் புரிந்து கொள்ளாவிட்டால் வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரு கணம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. எனவே. ஆண்கள் பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியம். ஆண்களின் அந்தரங்க உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது இந்த மினி என்சைக்ளோபீடியா. ஓர் ஆணின் சிந்தனை. செயல்பாடு. விருப்பம். எதிர்பார்ப்பு அனைத்தையுமு் உள்ளது உள்ளபடி படம் பிடிக்கிறது இந்நூல்.