ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. நூலாசிரியர் வேலூர் எம். இப்ராஹிம் அந்த ஆன்மாவின் குரலை அழகு தமிழில் இந்த நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாஜகவின் மேடைகளில் ஏறி நின்று கொண்டு நபிகள் பெருமானின் போதனைகளை முழங்குகிறார். பாஜகவினர் செய்யும் தவறுகளைப் பண்புடன் கண்டிக்கிறார். அயோத்தியில் ராமர் ஆலயம்தான் கட்டப்படவேண்டும் என்பதை நபிகளின் அருளுரைகளைக் கொண்டே o_{L} எடுத்துச்சொல்கிறார்.
சமஸ்கிருதம் எப்படி மதம் கடந்து இந்த தேசத்தின் செம் மொழியாகத் திகழ்கிறது என்பதை அழகாக எடுத்துரைத் திருக்கிறார். இந்துக்களின் மனம் புண்படுமென்றால் பசுமாமிசத்தை குர்பான் கொடுக்கவேண்டாம் என்று சொன்ன பஹதூர்ஷாவின் மத நல்லிணக்க உணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இஸ்லாமிய சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் இஸ்லாமிய
தலைவர்கள், அமைப்புகளை வெளிப்படையாகப் பெயர் சொல்லி கடுமையாக விமர்சிக்கிறார் dot pi . ஈவெராவுக்கும் கடுமையான மறுப்புகள் உள்ளன.
பொதுவெளியில் பேசப்படாத, அதேநேரம் கட்டாயமாகப் பேசப்பட்டிருக்கவேண்டிய முக்கியமான கருத்துகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தமிழ்சமூகத்தின் அனைவருடைய கைகளையும் சென்று சேரவேண்டும்.