நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம் 1)

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம் 1)
அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் அவர்கள் எழுதியதுநீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்ன போது அதை யாரும் நம்பவில்லை அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு எனக்காக வாதாட யாரும் முன்வராத போது வழக்கறிஞர்களை என்னைத் தேடி வரவைக்கிறேன் என்று நான் செய்த சபதத்தையும் நிரூபித்து காட்டினேன் இதனால் வழக்கறிஞர் இல்லாமல் வாதாட முடியும் என்பதை நீதி மன்றம் நம்பியதே தவிர மக்கள் நம்பவில்லை காலபோக்கில் அதன் உண்மையை அறிந்து தங்கள் வழக்கில் தாங்களே வாதாடி கொள்ளும் திறமையை பாதிக்கப்பட்ட மக்கள்எளிதில் வளர்த்து கொண்டார்கள் தற்போது சட்டப் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கில் பெருகி பிறர் வழக்கில் ஆஜராகி எடுத்து நடத்துகிற அளவுக்கு திறமை பெற்றுவிட்டார்கள் இந்தியாவை மாற்றுவதற்கு ஐந்து பேர் தேவை என்று முன்பு கருதினேன் ஆனால் நான் ஒருவனே போதும் என்று சொல்லுகிற அளவுக்கு நீதிமன்றங்கள் முன்னேறி வருகின்றன இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்கள் குறிப்பாக தமிழக நீதிமன்றங்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்கும் என்பதை நீங்கள் நம்பலாம்..