நிழல்களோடு பேசுவோம்

0 reviews  

Author: மனுஷ்ய புத்திரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நிழல்களோடு பேசுவோம்

எதைப் பற்றி எழுதினாலும், அதை ரசித்துப் படிக்க முடிகிற கட்டுரையாகத் தருகிற மிகச்சில எழுத்தாளர்களில் மனுஷ்ய புத்திரன் முக்கியமானவர். அவரால் இலக்கியம் பற்றியும் சிலாகித்து எழுத முடியும். ‘நிறமழியும் வண்ணத்துப்பூச்சிகள்’ என ஒரு நடிகையின் கண்ணீர்க் கதையையும் தர முடியும்.

‘குங்குமம்’ இதழில் ஒரு வருட காலம் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒரு வரையறைக்குள் அடங்காத பல செய்திகளை, சம்பவங்களை, துயரங்களை, கொண்டாட்டங்களை, உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் இந்தக் கட்டுரைகள் சுகமான ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. அதோடு, படிப்பவர்களின் இதயம் தொடும் நூலாகவும் இது நிச்சயம் இருக்கும்.
குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் பற்றிய மூன்று கட்டுரைகளை இந்தத் தொகுப்பின் ஆன்மா எனலாம். ‘பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விட்டு ஓடிப் போகிறார்கள். அல்லது ஓட வைக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்காத உலகில் வேறு யாருமே எதற்காகவும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த உலகத்தில் அன்பின் அளவுகோல், கருணையின் அளவுகோல், நாம் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது’ என்கிற வரிகள், எங்கெல்லாம் துன்பச்சூழலில் குழந்தைகளைப் பார்க்கிறோமோ... அங்கெல்லாம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தும்.
மனுஷ்ய புத்திரனின் இன்னொரு பலம், அவரது அங்கதம்! இந்த நூல் முழுக்க நிரம்பியிருக்கும் வாசகர் கேள்விகளுக்கான பதில்களில் அது அநாயாசமாக வெளிப்பட்டிருக்கிறது. ‘மேற்கு வங்கத்தில் மலிவு விலை சிக்கன், மீன் விற்கும் திட்டத்தை மம்தா பானர்ஜி துவக்கியுள்ளாரே?’ என்ற கேள்விக்கு மனுஷ்ய புத்திரனின் பதில்... ‘அம்மா’க்கள் என்று ஒரு இனம் உண்டு. அவர்களுக்கென்று ஒரு குணம் உண்டு!

இப்படி படிக்கவும் ரசிக்கவும் ஏராளம் உண்டு இந்த நூலில். இந்த வாசிப்பு அனுபவத்தை மிஸ் பண்ணிவிடாதீர்கள்!

நிழல்களோடு பேசுவோம் - Product Reviews


No reviews available