நீ நான் தாமிரபரணி!

Price:
280.00
To order this product by phone : 73 73 73 77 42
நீ நான் தாமிரபரணி!
ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில்|
இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய பத்திரிகையாளராகி. அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைத் தள்ளிடம் பணி புரியும் திறமையான இளைஞனிடம் ஒப்படைக்கிறார். ரகசியம் அந்த நாவலிலேயே மறைந்து இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் அவனுக்கும் பலத்த எதிர்ப்பு மறைமுகமாகப் பல வழிகளில் வருகிறது. அதையும் மீறி, ரகசியத்தில் அவனும் ஒரு அங்கம் என்பதை அறியாமல்,
பல திருப்பங்களுடன் அவன் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பாணியும் நிகழ்வுகளும் மிக விறுவிறுப்பும் சுவாரசியமுமானவை,