நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
‘நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்’
கட்டுரைகள்
ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்
கவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடனும் முன்னிருத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
பொதுச் சமூகம் மறந்துவிட்ட அல்லது நினைவுகொள்ள மறுக்கிற தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகளின் விரிவான மதிப்பீடுகளை இந்நூல் கொண்டிருக்கிறது.
தலித் கல்வி வரலாறு தொடர்பில் காந்தியின் அரிசன சேவா சங்கம் மதுரைப் பகுதியில் மேற்கொண்ட பணிகளையும், தலித்துகளின் கல்வி வரலாற்றையும் குறித்த இரு கட்டுரைகள் புதிய செய்திகளை அறியத் தருகின்றன.
தமிழக தலித் அரசியல் கறுப்பின அரசியல் தளத்திலிருந்து பெற்றுக்கொண்ட போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் செயல்பட்ட இயக்கம் பற்றிய சித்திரம், கோலார் தங்கவயலின் வைணவத் தொடர்பு, கல்விப் பணிகள், சித்தார்த்தா புத்தகச் சாலை, பதிப்பகப் பணிகள் எனக் காத்திரமான ஆதாரங்களுடன் இந்நூலின் பக்கங்கள் விரிகின்றன.
‘எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்' நூலைத் தொடர்ந்து வெளிவரும் ‘நெடுவழி விளக்குகள்' தலித் வரலாற்றியலில் சுடரும் புதிய வெளிச்சம்.
நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் - Product Reviews
No reviews available