நாரதரின் பக்தி சூத்திரம் (பாகம் 1)
பக்தியை அடைந்த பின் மனிதன் எந்தப் பொருளிலும் ஆசை வைப்பதில்லை;எதையும் வெறுப்பதில்லை;மோகவயத்திலும் ஈடுபடுவதில்லை;விஷய போகத்திலும் உற்சாகம் காட்டுவதில்லை. யஜ்ஞாத்வா மத்தோ ஸ்தப்தோ பவத்தி,ஆத்மாராமோ பவத்தி. அந்தப் பக்தியை அறிந்துகொண்டபின் மனிதன் பைத்தியமாகிவிடுகிறான்.ஆத்மராமன் ஆகிவிடுகிறான்...உன்மத்தனாகி விடுகிறான்,பைத்தியமாகிவிடுகிறான். பக்தியானது ஓர் அபூர்வமான உன்மத்தம்.கண்கள் எப்போதும் ஒருவித மயக்கத்தில் மூழ்கி இருக்கும் .மனம் எப்போதும் ஒருவித அபூர்வமான மதிமயக்கத்திலே மயங்கிக் கிடக்கும்.வாழ்க்கை சாதாரண நிலையைத் தாண்டி ஒரு நடனம் ஆகிவிடுகிறது.ஒருவித நாட்டியம் ஆகிவிடுகிறது.ரசனை இழக்கப்பட்டு ஒரு புதியபாதை துவங்குகிறது.