நான் புரிந்து கொண்ட நபிகள்

நான் புரிந்து கொண்ட நபிகள்
நபிகள் வெறும் அற பொதனைகள் செய்த இறைத் தூதா அல்ல.சமகால வரலாற்றில் செயலூக்கத்துடன் தலையிட்டவர்.மறுமையைப் பற்றியும் இறுதித் தீர்ப்புப் பற்றியும் பேசிய போதிலும் இந்த மண்ணிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமத்துவ சமூகத் திட்டத்தை வைத்துச் செயல்படுகிற மதம் இஸ்லாம்.வாழும் நெறிகளையும்,இறைக் கடமைகளையும் வலியுறுத்தும் புனித நூலாக மட்டுமின்றி அநீதிகளுக்கெதிராகப் போராடும் ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது திருக்குர்ஆன்.ஒட்டக மேய்ப்பராக வாழ்வைத் துவங்கி உலகை மாற்றியமைத்த முஹமது என்னும் நபிகள் நாயகம் மனிதர்க்குரிய பன்முக பண்புகளுடன் மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்.தலைமறைவாய் இயங்கிய ஒர போராளியாய.காதல் கொண்ட கணவராய், வாளேந்திய இறைத்தூதராய் வெற்றிகளை மட்டுமின்றி தோல்விகளையும் எதிர்கொண்ட தளபதியாய் எண்ணற்ற பரிமாணங்கள் உடையவர் நபிகள்.இஸ்லாம் மற்றும் நபிபகள் குறித்து அறியாதவர்களுக்க ஒரு எளிய அறிமுகமாகவும் ஏற்கனவே அறிந்தவர்களுக்கு சில புதிய செய்திகளை பகிர்ந்து கொள்வதாகவும் அமைகிறத இந்நூல்
பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்ளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மாணத்திற்குப் பித்திய வா மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் ன்று ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட் -தயும் முன்வைத்து இயங்குவதால் அது மிகவும் செயலூக்கத்துடன் வாலாற்றில் தலையிடுகிறது. தமிகள் ஒரு இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட வாளெடுத்துப் போரடியவா வாழ்நாளில் வென்று காட்டியவர்,
மசனுடராக தம்முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் அடியாகவும் அவரின் வாழ்வு வண்ணமயமானதாக விளங்குகிறது. ஏரானமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள், ஒரு இறைத்தூதராக மட்டுமின்றி தகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற மகனின் மரணத்தில் அழுது குலுங்குகிற. காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு சிறந்த மனிதராகவும் -அவர் நம்முன் தோன்றுகிறார். இந்தப் பரிமாணங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் அவர் வாழ்வின் ஊடாகவும், அவர் வழி இறங்கிய திருக்குர்ஆனின் ஊடாகவும் வெளிப்படும் சில முக்கிய இறையியல் சிந்தனைகளையும் நான் புரிந்துகொண்ட வகையில் இங்கே. முன்வைத்துள்ளேன்,