நஞ்சையில நாலு மா
நஞ்சையில நாலு மா
ஒரு அக்கா குருவி. தங்கை குருவி. ரெண்டுக்கும் நல்ல தாகம். ஆத்துல தண்ணி கரை புரளுது. அக்காவும்,தங்கச்சியும் சேர்ந்து ஆத்துல தண்ணி குடிக்கப் போகுதுங்க. ரொம்பவும் தாகத்துல தண்ணீர் குடிக்கும்போது அக்கா குருவி தடுக்கி சுழலில் விழுந்துவிட,ஆத்தோட வேகத்தில அடிச்சிட்டுப் போயிட்டு. அதை பரிதாபமாய்த் தங்கை குருவி பார்த்துட்டு நின்னுச்சு. அக்கா அக்கா... என்று கத்தியும் காப்பாத்த முடியலை. ஒண்ணும் பண்ண முடியாம தங்கச்சி குருவி கோவென்று அழுதபடி கூடு திரும்புது. வருசக்கணக்கில் செத்துப்போன அக்கா குருவியை நெனச்சு அழும் தங்கச்சி குருவி. தண்ணீர் வருகிற காலமெல்லாம் 'அக்காவ் அக்காவ் ' என்று கதறும். பாட்டியிடம் "ஏன் ஆத்தா இப்படி கத்துது" என்று கேட்பேன். இந்தக் கதையை சொல்லத் தொடங்குவார். ஒருநாள் இரவில் என்னை விட்டுவிட்டு பாட்டியும் மறைந்துபோனாள். அன்றோடு என் கிராமத்து கதையுலகமும் களவு போனது.
நஞ்சையில நாலு மா - Product Reviews
No reviews available