கருத்த லெப்பை

Price:
99.00
To order this product by phone : 73 73 73 77 42
கருத்த லெப்பை
உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்ளாத சமூகத்தில் பிறந்த கலாபூர்வமான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஒருவன் தன் தீர்க்கதரிசிக்கு உருவம் கொடுக்க விளைகிறான். இது நாவலின் மையம். இதனூடாக வர்க்க பேதங்கள், காமம், குரோதம், நிராசை பிறழ்வு அதிகார மோகம் என மனிதர்கள் அங்குமிங்கும் அலைவுறுகிறார்கள்.
இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்துக்கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்னை உருண்டை செய்து வைப்பாள். கருத்த லெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிப்பரபுக் கூட்டு ஸ்தாபனம் - தமிழ்ச்சேவை இரண்டு".