நடமாடும் வங்கி செம்மறி ஆடு வளர்ப்பு

நடமாடும் வங்கி செம்மறி ஆடு வளர்ப்பு
முதன்மை ஆசிரியரைப்பற்றி , ,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 16 வருடமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவற்றில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளவிருத்தி ஆராய்ச்சி நிலையத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலும் மற்றும் உழவர் பயிற்சி மையத்திலும் 12 வருடங்கள் பணியாற்றி உள்ளார். தற்பொழுது 4 வருடங்களாக சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரிவில் உள்ள கால்நடை ஒட்டுண்ணியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் கடந்த 10 வருடங்களில் 450 கொட்டில் முறை வெள்ளாட்டுப் பண்ணைகள் மற்றும் 15 செம்மறியாட்டுப் பண்ணைகளை அமைத்துக் கொடுத்ததோடு இவர் எழுதிய "கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு" என்ற புத்தகத்திற்கு சாந்தா நினைவுப் பரிசையும் பெற்றுள்ளார். மேலும் பண்ணையாளர்கள் பயன்பெற 6 புத்தகங்கள், 79 கட்டுரைகள் மற்றும் 26 கையேடுகளை பிரசுரித்துள்ளார்.