உழவுக்கும் உண்டு வரலாறு

உழவுக்கும் உண்டு வரலாறு
நமது நாட்டின் 2003ஆம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்னடி இங்குள்ள கால்நடைகள் 18 கோடியே 52 லட்சம்.நமது பசுக்கள் வழங்கும் எட்டாஙிரம் கோடி லிட்டர் பாலின் மதிப்பு ,1 லட்சம் கோடி ரூபாய்.நாட்டின் நிலங்களில் ஏறத்தாழ பாதி அளவுக்கு மாடுகள் கொண்டே உழவு செய்யப்படுகின்றன. 1 கோடியே 20 லட்சம் மாடுகள் வண்டி இழுக்கின்றன.இதன் மூலம் அறுபது லட்சம் டன் பெட்ரோலியப் பொருள்கள் மீதமாவது 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அன்னியச் செலவாணி மிச்சப்படுத்தப்படுகின்றன. தேசிய நடைமுறைப் பொருளியல் ஆராய்ச்சிக் கழகம் நமது மாடுகள் கொடுக்கும் சாணத்தின் மூலம் கிடைக்கும் எரிசக்தி , மூன்றரைக் கோடி டன் நிலக்கரி அல்லது 6.8 கோடி விறகுக்குச் சமம் என்கிறது.இது தவிர,34 கோடி டன் எடையுள்ள சாணம் நமது நிலங்களுக்கு எருவாகக் போய்ச் சேருகிறது.நமது கால்நடையிலிருந்து கிடைக்குப்பெறும் சக்தி "ஆறாயிரம் கோடி கிலோவாட் " என்று கணக்கிடப்படுகிறது.இதுவன்றி 10000கோடி கிலோ வாட் சக்தி ...7 கோடி காளை மாடுகள்,80 லட்சம் எருமைகள் ,10 லட்சம் குதிரைகள் ,10 லட்சம் ஒட்டகங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன. இதே சக்திக்காக நாம் இப்போது செலவழிப்பதைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவு வெற்தால் தான் இதே அளவு சக்தியை செயற்கை முறையில் நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% நமது கால்நடைகள் மூலமே கிடைக்கின்றன.நிலக்கறி ,பெட்ரோல் ,டீசல் மூலம் கிடைப்பவை வெறும் 14% மட்டுமே!