நான் ஏன் இந்து அல்ல

0 reviews  

Author: காஞ்சா அயல்ய்யா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நான் ஏன் இந்து அல்ல

நான் மட்டுமன்று, இந்திய தலித்பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் ஆகியோரிடமிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று மட்டும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
***

இது இந்நூலாசிரியரின் சினமூட்டக்கூடிய அறிவிப்புகளில் ஒன்று. தம்மை ஒரு தலித் பகுஜன் என அடையாளப்படுத்தும் இவர், சுரண்டுதலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான வெகுமக்களில் ஒருவன் என்கிறார்; உணர்ச்சி பொங்கும் கோபத்துடனும் எள்ளலுடனும் இன்றைய இந்தியாவின் நிலைமையை விவரிக்கிறார்; தலித்பகுஜன்களும் இந்துக்களும்
சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியில் எவ்விதம் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனப்படுத்துகிறார். குழந்தைப் பருவம், குடும்ப வாழ்க்கை, சந்தை உறவுகள்,
அதிகார உறவுகள், ஆண்-பெண் தெய்வங்கள், இறப்பு,
இந்துத்துவம் ஆகியவை குறித்த ஏராளமான கருத்துகளை தலித்பகுஜன் சமூகத்திடமிருந்து சேகரித்து அதுவொரு
நீதிமிக்க சமூகம் என்றும் நிறுவுகிறார்

நான் ஏன் இந்து அல்ல - Product Reviews


No reviews available