நாகம்மாவா

0 reviews  

Author: நீல பத்மநாபன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நாகம்மாவா

 நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும் போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் கால் பதிக்கும் உணர்வே மேலிடும். பாரபட்சமற்ற நேர்மையுடனும், ஆரவாரமற்ற அங்கதத்துடனும் சமூகத்தின் மீது நீல. பத்மநாபன் வைக்கும் விமரிசனங்கள் சாகாவரம் கொண்டவை.
20 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 9 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ள நீல. பத்மநாபன், சாகித்திய அகாதமி பரிசு, அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.