108 திவ்ய தேச உலா பகுதி-4

108 திவ்ய தேச உலா பகுதி-4
பெருமாள் உறையும் திருத்தலங்களைத் தரிசனம் செய்யும் பேறு பலருக்குக் கிட்டியிருந்தாலும், அவற்றில் குறிப்பாகத் திவ்யதேசங்கள் என்று ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்களைத் தரிசிப்பது என்பது மகத்தான பேறு என்றே சொல்லலாம். அந்த வகையில் அவர்கள் வகுத்துக்கொடுத்த 108 திவ்ய தேசங்களில் மனித முயற்சியால் தரிசிக்கக்கூடியவை மொத்தம் 106. இந்தியா நெடுகிலும் பரவியிருக்கும் இந்தத் திவ்ய தேசங்களை (அவற்றில் ஒன்று நேபாள நாட்டிலும் உள்ளது) நேரில் சென்று தரிசிக்கும் பேறும் அபூர்வமாகவே அமைகிறது.
தானே நேரில் சென்றும், பல ஆன்றோர்களின் பயண அனுபவங்களைக் கேட்டும், பல புத்தகங்களிலிருந்து ஆதாரங்களையும், விவரங்களையும் தொகுத்தும் தன் கட்டுரைகளை இந்தப் புத்தகத்தில் அமைத்திருக்கிறார் பிரபுசங்கர். அப்படி அவர் தொகுத்த கட்டுரைகள் இதுவரை மூன்று பாகங்களாக வெளிவந்து ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இது நான்காவதும் நிறைவானதுமான பாகம். வழக்கம்போல இந்தப் பாகத்திலும் இடையிடையே பெருமாள்களின் வண்ணப்படங்கள் இந்தப் புத்தகத்தையும் அலங்கரிக்கின்றன. 108 திவ்ய தேசப் பெருமாள்களின் ஆசி அனைவருக்கும் நிலைக்கட்டும்..