முதல் உலகப் போர்

முதல் உலகப் போர்
மருதன் அவர்கள் எழுதியது. ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர் உலகம் அதுவரை கண்டிராத பேரழிவை கொண்டு வந்த போரும் கூட நூற்றாண்டு கால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியை துறந்தது போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது
முதல் உலகப் போர் ஜரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களை களத்தில் இறக்கி ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாக துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?
இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும் இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும் ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்றதற்குமான மூல காரணம் முதல் உலகப் போரில் இருக்கிறது
இரண்டாம் உலகப் போர் குறித்து முன்னதாக எழுதிய மருதனின் இந்தப் புத்தகம் முதல் உலகப் போரின் அரசியல் சமூக ராணுவ வரலாற்றை விரிவாக பதிவு செய்கிறது