மூங்கில் மூச்சு (விகடன்)
மூங்கில் மூச்சு (விகடன்)
தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு காலச்சார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்து கொண்டு போகிறார்.... அந்தக் காலத்தில் மத்தியதரக் குடும்பத்தில் அபூர்வமாக இருந்தன. ரேடியோ பெட்டிகள் அவற்றில் ஒலித்த சிலோன் ரேடியோவும் ஒலிச்சித்திரங்களும் அந்த காலத்தே அப்படியே கண்முன்னே நிறுத்துகின்றன. நாங்கள் சிலோன் ரேடியோவின் மயில்வாகனனின் மதுரமிக்க குரலால் கவரப்பட்டவர்கள் என்றால்..... சுகா, அப்துல் ஹமீதினாலும்,கே.எஸ்.ராஜாவினாலும்,ராஜேஸ்வரி சண்முகத்தாலும் கவரப்பட்டவர்.
ரேடியோவின் காலம் முடிந்து டேப் ரிக்கார்டின் காலமும், பிறகு சி.டிக்களின் வரவும், ரத்தமும் தசையுமான மனித உறவுகளினூடே வெளிப்படுகின்றன. சின்ன சின்ன வலிகளும், சின்ன சின்ன சந்தோஷங்களும் இந்த தொடரெங்கும் விரவிக்கிடக்கின்றன. மெலிதான நகைச்சவையும் கூட உள்ளது.
இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல....ஓர் இளைஞனின்,காலத்தின்,ஒரு தலைமுறையின் சுவாசம்!
மூங்கில் மூச்சு (விகடன்) - Product Reviews
No reviews available