மெனிஞ்சியோமா
Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
மெனிஞ்சியோமா
மார்ச்சுவரியின் ஒவ்வொரு இழுப்பறையாக திறந்து பார்ப்பது போல் ஒரு மெல்லிய பதற்றத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பரப்பி வைத்திருக்கிறான் சந்துரு. ஒரு நத்தை தன் கூட்டை இழந்து வெயிலில் அதன் மெல்லுடல் மின்னும் தகிப்பு அவனது தனிமையின் கதறலில் எதிரொலிக்கிறது. அந்தத் தகப்பனின் பரிதவிப்பு உருவாக்கும் கழிவிரக்கம், காயமுற்று சீழ் பிடித்த பாகத்தை அறுத்தெரியும் வலி, பிறப்புறுப்பில் கீறி மருந்திட்ட நிலையில் சந்துரு உச்சம் எய்துவதாய் எழுதப்பட்டிருக்கும் வரி ஒரு வலிக்கொண்டாடியால் மட்டும் எய்தக்கூடிய பித்தம்.
– நேசமித்ரன்
Most of us always feel the scenario of a hospital as unpleasant, stingy, compressed, dipped in the aroma of medicines, cleansing liquids, Iodine etc… unless one or his closed ones are associated with it, in an life retrieval mission. But in this book, the author vividly records the scenario of an hospital in a way, even the clinical staffs there can’t accurately describe. Another major wall of this narration is the mentioning of every medical term and phrases associated with meningioma in a well fitted manner.
– நவீன்ராஜ் அருணாச்சலம்
– நவீன்ராஜ் அருணாச்சலம்
மரபான கதை சொல்லும் முறையிலிருந்து விலகி, மாற்றாக வேறொரு கதை சொல்லும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார் கணேசகுமாரன். அதனாலேயே இது வரவேற்கப்பட வேண்டிய ஓர் அம்சமாக ஆகியிருக்கின்றது. சற்றே ஆழ்ந்து வாசிக்க முயன்றால் படைப்பாளி பல்வேறு தளங்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறார் என்பது புரியக்கூடும். அந்த ஒன்றிணைப்பு ஆழ்ந்த மனவலியைத் தருவதாகயிருக்கின்றது. படைப்பின் வழியே, முடிவற்ற படிமங்களாக, உருவகங்களுமாகத் தன்னை வெளிப்படுத்தும் அந்த வலியை வாசகன் உணரும்படியாக, உரைநடையில் கவித்துவமானதாகச் செய்திருக்கின்றார்.
– அர்ஷியா
– அர்ஷியா
மெனிஞ்சியோமா - Product Reviews
No reviews available