விடி வெள்ளி

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
விடி வெள்ளி
சோவியத் மண்ணில் பாசிசக் கும்பல் விரைந்து நுழைந்தபோது கஸகேவிச் இராணுவப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவரது உடல்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. மருத்துவர்களும் இப்பணிக்கு அவரை அனுமதிக்கவில்லை. ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் முன்னணிக்குச் சென்று தன்னை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரினார். பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். சாதாரணப் போர் வீரனாகச் சேர்ந்த அவர், போர் முடிந்தபோது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைமை நிலைய உயர் அதிகாரியாகப் பொறுப்பு வகித்தார். அவரது நெஞ்சங் கவர்ந்த இராணுவக் கொரில்லா வீரர்களுக்காக இந்நூலை அர்ப்பணம் செய்தார்.