மே தினம்
மே தினம்
“நேரம் வரும் அப்பொழுது,எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.இன்று நீங்கள் எங்கள் குரலை நெறிப்பதை விட..’’தூக்கு மேடையில் நின்று சிகாகோ தியாகி ஆகஸ்ட் ஸ்பைஸ் முழக்கிய இவ்வார்த்தைகளோடு புத்தகம் துவங்குகிறது. 1880களில் அமெரிக்காவில் தொழிலாளிகளின் சராசரி ஆயுட்காலம் வெறும்30வருடம் மட்டுமே என்கிற செய்தி1886இல் மேதினம் அமெரிக்காவில் வெடித்ததன் பின்னணியாக உள்ளது.சாசன இயக்கத்திலிருந்து மேதினத்தை நோக்கி நகர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு சுருக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில்1862இல் இந்திய ரயில்வேத் தொழிலாளிகள்8மணி நேர வேலை கேட்டு வேலைநிறுத்தம் செய்தது முதல் வ.உ.சி நடத்திய தொழிற்சங்க இயக்கம் வரையிலான வரலாற்றின் இந்தியப் பக்கம் விரிகிறது.வேலை நிறுத்த உரிமை,சங்கம் வைக்கும் உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்த நாட்களில் மேதினத்தின் சாரத்தை உழைப்பாளி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண¢டிய அவசியம் முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது.அதற்கு உதவும் வகையில் இப்புத்தகம் வந்துள்ளது.
மே தினம் - Product Reviews
No reviews available