ஸ்பீல்பெர்க்

ஸ்பீல்பெர்க்
கடலின் அடியாழத்தில் மறைந்து கிடக்கும் சுறாமீன்கள். எப்போதோ தொலைந்து போன டைனோசார்கள். பிரபஞ்சத்திலேயே இல்லாத விண்வெளி ஜந்துகள். ஸ்பீல்பெர்க்கின் டாப் நட்சத்திரங்கள் இவர்கள்தாம். இவர்களை வைத்துத்தான் உச்சத்தைத் தொட்டார் அவர். பொறுமையாக, சாதுரியமாக, ஒவ்வொரு படியாக, பார்த்துப் பார்த்து முன்னேறியவர் அவர். இவரது முதல் படம் அட்டர் ஃப்ளாப். பல படங்கள் சுமார் ரகம். ஆனால் இதே ஸ்பீல்பெர்க்கால் ஒரு வசூல் ராஜாவாகவும் ஜொலிக்க முடிந்தது. அநாயாசமாக நூறு மில்லியன் டாலர் வசூலை அள்ளிக் குவித்து, ஹாலிவுட்டைத் தன் சுண்டு விரல் நகத்துக்குள் கொண்டு வர முடிந்தது. ஒரு சிறந்த இயக்குநர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது? ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது? ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது எப்படி? அத்தனை வித்தைகளையும் ஸ்பீல்பெர்க்கிடம் இருந்து கற்கலாம். ஸ்பீல்பெர்க்கின் கதையை விவரிக்கும்போது, கூடவே ஹாலிவுட்டின் சரித்திரமும் வந்து ஒட்டிக்கொள்வது இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம். மிகவும் விறுவிறுப்பாக ஒரு பந்தயக் காரின் வேகத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார் ச.ந. கண்ணன். ஜாக்கி சானின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் இவரது முந்தைய சூப்பர் ஹிட் புத்தகம், குதி .