மன்மதக் கொலை

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
மன்மதக் கொலை
இரு ஆண்கள், நான்கு பெண்கள் – ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சுழல் – காதல்! ஒருவரையே இருவர் காதலிக்க, அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க. . . ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் போராட்டங்கள் வெடிக்கின்றன. இச்சுழல், இவர்களில் ஒருவரைப் பலி வாங்கிவிடுகின்றது.
கொலை!
செய்தது யார்?
இதற்கான பதில் தேடி, காதலின் அடியாழத்தைத் தொட்டுக் கொண்டுப் பிரயாணிக்க ஆரம்பிக்கும் துப்பறிதலின் சிறப்பான ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது – காதல் தவிப்புகள்
குழம்பிய குட்டையாய் நடக்கும் காதல் போராட்டங்களை மெல்ல மெல்லத் தெளிய வைத்து, சீர் செய்து, அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஆசுவாசப்படுத்திவிட்டு, கடைசி அத்தியாயங்களில், கொலைகாரனைக் காரண காரியங்களோடு அறிமுகப்படுத்துவது நாவல் எனும் எழுத்து வகைக்கே இலக்கணம் வகுத்துத் தரும் மேதைமையாகிவிடுகின்றது.