மங்கல இசை மன்னர்கள்

0 reviews  

Author: பி.எம். சுந்தரம்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  270.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மங்கல இசை மன்னர்கள்

பி.எம். சுந்தரம் இசை மரபில் தோன்றியவர். தவில் உலகின் சக்கரவர்த்தி நீடாமங்கலம் மீளாட்சி சுந்தரம் பிள்ளை பி.எம், சுந்தரத்தின் தந்தை. நாட்டியத்தில் சிறந்து விளங்கிய தஞ்சாவூர் பாலாம்பாள் - இவரது தாயார். தன் பெற்றோர்கள் சிறந்து விளங்கிய கலைகளுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அவர் எழுதியிருக்கும் நூல்களான நாகஸ்வர தவிற் AV கலைஞர்களைப் பற்றிய 'மங்கல இசை மன்னர்களும்', பாதநாட்டிய கலைஞர்களைப் பற்றிய 'மரபு தந்த மாணிக்கங்களும்' கலைத்துறையைப் பொருத்தமட்டில் மைல்கற்கள். இவர் தஞ்சை தரணியில் பிறந்தவர். 1951இல் இசைத் துறையில் பட்டம் பெற்றவர். இசைமேதை ஜி, இராமநாதன் அவர்களிடம் இரண்டு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். ஆய்வாளர், எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர் என்ற அவருடைய பன்முகங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்து தேர்ந்தவர். இசையும் இலக்கியங்களும் முறைப்படி கற்று அவற்றில் அவர் செய்துள்ள ஆய்வுகளின் அகலமும் ஆழமும் அசாதாரணர்களுக்குரியவை. 'சாப்பிட்ட பின் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி பழைய கதைகளை எல்லாம் அப்பா சொல்வார். அவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் இந்த ஆவணப்படுத்தல் தொடங்கியது' என்கிறார் பி.எம். சுந்தரம். நீடாமங்கலத்தாரின் மறைவுக்குப் பின், பல ஆண்டுகள் உழைத்து சிறுகச் சிறுக தகவல் சேமித்திருப்பதை புத்தகத்தைப் பார்த்தாலே உணர்ந்துகொள்ள முடிகிறது.

இந்த நூல் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு அன்று. வாழ்க்கைச் சுருக்கமேயென சற்றே வருத்தத்துடன் பி.எம். சுந்தரம் குறிப்பிடுகிறார். வாழ்க்கைச் சுருக்கமாக இல்லாமல் வெறும் பெயர் L * n degrees பட்டியலாக மட்டுமே இந்த நூல் இருந்திருந்தாலும் அது பெரிய சாதனைதான்

மங்கல இசை மன்னர்கள் - Product Reviews


No reviews available