மாண்புமிகு மாணவர்களே

மாண்புமிகு மாணவர்களே
இந்த நூலை இரண்டு பகுதிகளாக அமைத்திருக்கிறேன்
முதல் பகுதி:படிக்கிற காலத்தில்
இந்தப் பகுதியில், படிக்கிற அந்தப் பருவத்தில், மாணவர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய, அக்கறை காட்ட வேண்டிய விஷயங்களை வரிசைப்படுத்தி வலியுறுத்தியிருக்கிறேன். அவைகளை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டவர்கள்,படிப்பிலும், பண்பிலும் சிறந்தவர்களாய் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உண்டு.
இரண்டாம் பகுதி:படிப்பு முடிந்த பின்
படிக்கிற காலம் என்னும் அத்தியாயம் முடிந்தபின், வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளுதல் என்னும் ஒரு புதிய அத்தியாயம் உதயமாகிறது. சொந்தக்காலை ஊன்ற வேண்டிய அவசியமும், ஊன்றிய காலுக்கு உரம் ஊட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந்த அத்தியாயத்தை சிறப்பாக அமைத்துக் கொள்கிறவர்களே, வாழ்ந்தற்கான அடையாளங்களை வையகத்தில் விட்டுச் செல்ல முடியும்.
வகுப்பில் ஜெயிப்பதை விட வாழ்க்கையில் ஜெயிப்பது தானே மிக மிக முக்கியம்.