மானக்கேடு

மானக்கேடு
கேப் டவுன் பல்கலையில் ரொமான்டிக் கவிதைப் பிரிவில் பல ஆண்டுகளாகப் பாடம் நடத்தியிருந்தவரும், இருமுறை விவாகரத்து செய்திருந்தவருமான டேவிட் லூரி ஓர் உணர்வுந்துதலால் தன் மாணவி ஒருத்தியுடன் தொடர்பை உண்டாக்கிக்கொள்கிறார். அந்த உறவு கசந்துபோகிறது. கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டு விசாரணைக் குழுவின் முன்பு அவர் ஆஜராகும்படி நேர்கிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள இசைகிறார். ஆனால், பொதுமன்னிப்பு கோரச் சொல்லி வற்புறுத்தும்போது அதற்கு இசைய மறுத்து, தன் வேலையை ராஜினாமா செய்கிறார். பிறகு, தன்னுடைய மகள் லூசியை நாடி அவளுடைய சிறிய பண்ணைவீட்டுக்குச் செல்கிறார். அவருடைய மகள் மற்றும் பண்ணையின் இயற்கைச் சூழலால் அவருடைய இசைக்கேடான வாழ்வில் ஓர் ஒழுங்கு கூடலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. ஆனால், அவரும் லூசியும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாவதில் அவர்களுடைய உறவின் அத்தனை சிக்கல்களும் வெளிப்படுகின்றன.