ஜாப் மார்சியா

ஜாப் மார்சியா
எந்தப் பீடத்தின் முன்னும் மண்டியிடாத பகடிக்காரன்தான் பிரபு. அவனது எள்ளல் எழுத்துக்குச் சமமான எழுத்தைத் தற்காலத் தமிழ்ப்புனைவுகளில் காண்பதரிது... பிரபுவின் எழுத்தில் காணக்கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு ஈடான இயல்பான மனிதர்களை உங்களால் மலையாள இலக்கியத்திலும், மலையாளத் திரைப்படங்களிலுமே காண இயலும்!
அதற்காக அவனது எழுத்துகளை வெறும் பகடி வகைமைகளுக்குள் மட்டுமே ஒதுக்கிவிட முடியாது. அழுத்தமான கதைகளையும், அமானுஷ்யமான கதைகளையும் தனித்துவத்தோடு எழுதியிருக்கிறான். பிரபு தர்மராஜ் போன்றவர்கள் ‘நான்தான் கடவுள்’ என்று சொல்லித் திரியும் இலக்கியவாதிகளுக்கு பேயோட்டும் எழுத்து நாத்திக மந்திரவாதிகள் ஆவார்கள். இப்படியொருவனே எழுத்துலகில் இல்லாதது போன்று அந்த இலக்கிய சத்(கு)ருக்கள் கண்ணை மூடிக் கொண்டு கள்ளமெளனம் காப்பார்கள். அதையெல்லாம் எள்ளலோடும், எகத்தாளத்தோடும் கடந்து செல்லும் இலக்கிய உலகில் தவிர்க்கவியலாத ஆளுமை பிரபுதர்மராஜ்... நம்போன்ற வாசகர்கள் இ(வ)தனை முன்னெடுப்போம்...