மய்யம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்

Price:
700.00
To order this product by phone : 73 73 73 77 42
மய்யம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்
உலக நாயகன் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக மய்யம் எனும் பத்திரிகையை 1987-ல் தொடங்கினார். திரைப்பட ரசிகர்களின் ரசனையும், அறிவுத் தேடலும் மேம்பட வேண்டும்; சமுதாய முன்னேற்றத்திலும் நற்பணிகளிலும் தன்னுடைய ரசிகர்கள் தீவிரத்துடன் ஈடுபட வேண்டும் என்பன இதழின் ஆதார நோக்கமாக இருந்தன. ‘தேடித் தீர்ப்போம்..’ எனும் அழைப்புடன் தொடங்கப்பட்ட இதழில் தமிழின் முன்னணி எழுத்தாளர்களும் கலைஞர்களும் பங்களிப்பாற்றினர். ரசிகர் மன்றப் பத்திரிகையாக இல்லாது தரமான இடைநிலை இதழாக மய்யம் திகழ்ந்தது. மய்யம் இதழ்களில் வெளியான படைப்புகளைத் தொகுத்து ‘மய்யம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்’ எனும் புத்தகத்தை ‘கமல் பண்பாட்டு மையம்’ வெளியிட்டுள்ளது.