மாற்று இதயம்

மாற்று இதயம்
புதுக்கவிதை இப்போது கொஞ்சம் செக்கு மாடாகச் சுற்ற ஆரம்பித்திருப்பதுபோல் படுகிறது. உள்ளடக்கம் வீச்சு, விரிவு இரண்டிலும் நானாவிதமோ நீட்சியோ பெறத் தயங்குகிறது. புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் இரண்டாம் தர, மூன்றாம் தர படைப்புகளை 'இமிடேட்' செய்வது அதிகமாகிறது. சத்தான, தக்கான கவிதைகளை முதல்தர கவிதைகளைத் தொடர்ந்து படித்தால்தான் பயன் இருக்கும். கவிதையின் தரம் உயர வழி ஏற்படும். எனவே பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தருவது அவசியமாகும். அதை இதில் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். பிரிட்டிஷ், அமெரிக்க, அமெரிக்க கருப்பர், ஸ்பானிய, லத்தின் அமெரிக்க நாட்டு பிரபல கவிகளின் கவிதைகளை மாதிரிக்குத் தந்திருக்கிறேன். மூலக்கவிதைகளின் வரியமைப்பு தொனி, நடையை கூடிய மட்டும் காப்பாற்ற முயன்றிருக்கிறேன். எனவே, கவிதைக்குக் கவிதை நடை மாறுபாடு இருப்பதைக் கவனிக்கலாம்.
மணிக்கொடி காலத்தில் சிறுகதை படைப்பாளியாக மலர்ந்த நான் எழுத்து காலத்தில் கவிதை எழுதுபவனாக மொட்டுவிட்ட நான் 'எலியும் தன் வாலை உணர்த்திய' கதையாக இந்தக் கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
- சி.சு. செல்லப்பா