பாரதியார் கவிதைகள் (மூலமும் உரையும்) 1200 ரூ
உரை: பத்மதேவன்
பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல,
அது சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.