குற்றவாளிகள் ஜாக்கிரதை!

குற்றவாளிகள் ஜாக்கிரதை!
.சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இக்குற்றங்கள் நடைபெறாத தவிர்க்கலாம்.
* பொருளை வாங்கும்போது சரியான நம்பிக்கையான இடத்தில் வாங்க வேண்டும் .வாங்கிய பெருளுக்கான ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும்.வாங்கிய பொருள் நமது பொருள்தான் என்பதற்கு இந்த ரசீது உதவியாக இருக்கும்.
*சில பொருட்களை வாங்கும்போது பதிவு செய்வது அவசியம். உதாரணமாக வாகனங்கள் வாங்கும்போது அந்த நிறுவனமே பதிவு செய்துதரும்.பழைய வாகனம் வாங்கும்போதும் பதிவுத் துறைக்கு வாகனம் வாங்கியதை தெரிவிக்க வேண்டும். வாகனத்தை விற்றாலும் பதிவுத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இச்செயல் பின்னாளில் வாகனத்தால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அந்தப் பொறுப்பு நம்மைச் சேர்வதைத் தவிர்க்க உறவும்.
* பதிவு செய்து ரசீது கொடுக்க மறுத்தால் அதற்காக பதற்றப்பட வேண்டாம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரி இருப்பார். அவருடைய அலுவலகத்தை அணுகி உங்களின் புகாரைக் கொடுக்கலாம். அவர் அதை வாங்கி உரியவர்களிடம் சேர்த்து வேண்டிய நடவடிக்கை எடுக்கச் சொல்வார். மேலதிகாரியும் மறுத்தால் நீதிமன்றத்தை அணுகி உங்கள் புகாரைப் பதிவு செய்யச் சொல்லலாம். குற்றம் நடந்த இடத்தை போலீஸ் அதிகாரி வரும் வரை வேறு யாரும் தொடாமல் பாதுகாப்பது மிக முக்கியம்.குற்றவாளி மிக முக்கியமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கலாம். அந்தத் தடயங்கள் குற்றவாளியைப் பிடிக்கவும் மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்கவும் உதவும். விரல் ரேகை நிபுணர்கள் வரும் வரை குற்றம் நடந்த இடத்தைப் பாதுகாப்பது மிக நல்லது....