கோவை கலவரத்தில் எனது சாட்சியம்
கோவை கலவரத்தில் எனது சாட்சியம்
எழுதியவர் : ஏ வி அப்துல் நாசர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).
எழுத்தாக்கம் : பழனி ஷஹான்
காவலர் செல்வராஜ் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதை ஒட்டி முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 97 தாக்குதல் காவல்துறையும், இந்து முன்னணி முதலான மதவெறி அமைப்புகளும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்டது. கொல்லப்பட்ட செல்வராஜ் ஒரு கிறிஸ்தவர். பெயர் அந்தோணி செல்வராஜ். இந்த உண்மை மறைக்கப்பட்டு, முஸ்லிம்கள் ஒரு இந்துவைக் கொன்றதாகவே பிரச்சினையை முன்வைத்துக் கலவரத்தைத் தூண்டியதில் காவல்துறையின் பங்கு முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட 97 நவம்பர் படுகொலைகள் குண்டு வெடிப்புகள், சிறைக் கொடுமைகள், வழக்கு முடிவுகள் வரை கோவைக் கலவரங்கள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இதை நாசர் தயாரித்துள்ளார். – அ. மார்க்ஸ் உண்மையை அறியவும், உணரவும் விரும்புகிறவர்கள் மட்டும் இப்புத்தகத்தை வாசிக்கக் கடவது. மற்றவர்களை விலகி நிற்குமாறு ஆணையிடுகிறேன். எப்போதும் என்றைக்கும் நீதி மறுக்கப்பட்டவர்களின், வஞ்சிக்கப்பட்டவர்களின், நிராகரிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் போய் நின்று கொள்ளுங்கள். அது அவர்களோடு போய் நிற்பது மட்டும் அன்று; நீதியின் பக்கம் நிற்பது; நீதியாகவே நிலை பெறுவது.
– பாரதி கிருஷ்ணகுமார்
கோவை கலவரத்தில் எனது சாட்சியம் - Product Reviews
No reviews available