கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை !

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை !
அறிவியல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அறிவியலாளர்களுடைய சிறிய, பெரிய கண்டுபிடிப்புகள்தான் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் கண்டுபிடித்தவற்றை ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம், அதன்மூலம் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
சுவையான அறிவியல் நிகழ்வுகள், செய்திகள், கண்டுபிடிப்புகளை எளிமையான கதைகளின் வடிவில் வழங்கும் நூல் இது, அறிவியலின்மீது மாணவர்களுக்கு ஆர்வத்தையும் காதலையும் உண்டாக்கக்கூடியது.
இவ்வகையில் இன்னும் பல கதைகளை ரசிக்க, என். சொக்கனுடைய 'அறிவியல் கதைகள்' என்ற நூலைப் படியுங்கள்.