கிரிமினல் கிங் சார்லஸ் சோப்ராஜ்
கிரிமினல் கிங் சார்லஸ் சோப்ராஜ்
ஒரு மனிதன் நல்லவனா என்பதை முடிவு செய்ய அவன் அறிவு மட்டும் போதாது என்பதற்கு சார்லஸ் சோப்ராஜ் உதாரணம்! திட்டமிடுவதில் - அதைச் செயலாக்குவதில்- பேச்சால் பிறரை கண நேரத்தில் வசீகரிப்பதில்- செஸ் விளையாட்டில் இவன் அறிவாளி: நுட்பமானவள்! ஆனால் இந்த அறிவை அவன் எதற்குப் பயன்படுத்தினான்?
கொள்ளை அடிப்பதற்கு- கொலை செய்வதற்கு - நீதியின் சந்நிதானத்திலிருந்து தப்பி பிழைப்பதற்கு ...இதுபோன்ற குற்றங்களுக்கே இவனது அறிவு பயன்பட்டது!
எண்பதுகளில் இவன் உலகப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளில் அடிப்பட்டவன்! இரும்புக் கோட்டை போன்ற சிறைச்சாலைகளிலிருந்து தப்பி சாகசம் படைத்தவன்
மீடியாக்களின் பரபரப்பான பக்கங்களின் செய்திகளில் இவன் பெயர் அடிபடா விட்டாலும் தெல்லி திஹார் ஜெயிலில் தண்டனைக் கைதியாக இருக்கும் சோப்ராஜ் நேபாளத்துக்குள் நுழைந்தால் தூக்கு தண்டனை காத்திருக்கிறது
இவனின் கிரிமினல் செயல்களை ஒரு திகில் நாவலைவிட விறுவிறுப்பான வகையில் அழகாகத் தொகுத்திருக்கிறார் புஷ்பா தங்கதுரை நாவல்கள் கற்பனை: இவன் கதையோ உண்மை: உண்மையிலும் உண்மை!
கிரிமினல் கிங் சார்லஸ் சோப்ராஜ் - Product Reviews
No reviews available