லண்டாய்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
லண்டாய்
“என் கிராமத்தையும் வீட்டையும் அழித்த உன் பீரங்கியையும் ஓட்டுநரில்லா விமானத்தையும் என் கடவுள் அழிக்கட்டும்” எனும் இந்த வரிகள் இருபத்தோராம் நூற்றாண்டின் வேண்டுதல். கவிஞர் ச.விஜயலட்சுமியின் மிக முக்கியமான இலக்கிய ஊழியமாக நான் அடையாளப்படுத்த விரும்புவது இந்த மொழிபெயர்ப்பைத் தான். இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்கள் அனைத்துமே குருதியும் நிணமும் சூழ அந்நிலத்துப் பெண்களிடமிருந்து தோன்றியவை. ஆனால் அவர்கள் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவே பாடுகின்றனர். பலவிதமான குரல்களும், வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் நிரம்பியிருக்கும் இந்தப்பாடல்கள் போர் இலக்கியத்தில் மிக மிக முக்கியத்துவமானவை.
அகர முதல்வன்.