கவிதை நயம்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
கவிதை நயம்
கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது: எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகையாக அமைவது; சொற்களால் உருப்பெறுவது; கவிஞனின் தனித்திறனையும் கோருவது; வெளிப்படையாகவோ உள்ளார்ந்த நிலையிலோ ஓசை நயம் உடையது.
கோட்பாட்டு மேற்கோள்களால் அச்சுறுத்தாமல், இவ்வாறெல்லாம் பேராசிரியர் கைலாசபதியும் கவிஞர் முருகையனும் கைப்பிடித்து அழைத்துச்சென்று கவிதை நயம் காட்டுகிறார்கள்.
கவிதையை இயல்பாகச் சுவைக்கலாம். ஆனால் அதன் நுட்பத்தைக் காணவும் திறனாய்வு செய்யவும் பயிற்சி வேண்டும். பயில்வதெனில் கவிதைக்கூறுகளை அறிய வேண்டும்; அக்கூறுகள் இயைந்து நின்று கவிதையாவதை இனங்காண வேண்டும்; உண்மைக் கவிதையைப் போலியிலிருந்து பிரித்தறிய வேண்டும்.