கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
ரசனைசார் கட்டுரைகளின் வசீகரம் அதன் கதம்பத்தன்மைதான் என்றாலும் எழுதுவது தேர்ந்த கை என்றால் அந்தப் பன்முகத்தை மீறிக் கொண்டு சீரான ஆன்மக் குரல் ஒன்று அதில் ஒலிக்கும். இலக்கியம், சினிமா, இசை, மொழி, சமூகம், உளவியல் என விரிந்த தளத்திலான இக்கட்டுரைகளுக்கும் அக்குணம் உண்டு. அதுவே இவற்றை ஒற்றைத் தொகுப்புக்குரிய கட்டுரைகளாக்குகிறது! இதில் பாரதியும் உண்டு, பாராவும் உண்டு; பாலு மகேந்திராவும் உண்டு, மிஷ்கினும் உண்டு; இளையராஜாவும் உண்டு, அநிருத்தும் உண்டு; ஓவியாவும் உண்டு, சௌம்யாவும் உண்டு; பொச்சும் உண்டு, முகமும் உண்டு!