கண்ணீரில்லாமல்...

கண்ணீரில்லாமல்...
உயிர்மை இதழ் துவக்கப்பட்டபோது அதில் சுஜாதா கண்ணீரில்லாமல் என்ற தலைப்பில் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்கக்கூடிய ஒரு தொடர் ஒன்றை ஆரம்பித்தார் இத்தொடரில் யாப்பு, சங்ககாலம், காப்பியங்கள், சித்தர்கள், தனிப்பாடல்கள் ,மேற்கத்திய இசை ,கணினித் தமிழ், திரைக்கதை, கிரிக்கெட், க்வாண்டம், இயற்பியல், கர்நாடக சங்கீதம், ஜென் போன்ற பல விஷயங்களை பற்றி எழுதவேண்டும் எனபது அவர் கனவு ஆங்கிலத்தில் இத்தகைய மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எளிய அறிமுக நூல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன தம்ழில் அதிதகைய சில நூல்களை எழுதவேண்டுமென்பதே அவரது கனவு ஆகால் இந்தத்தொடர் உயிர்மையின் இதழ்களில் வெளிவந்து பிறகு தற்செயலான காரணங்களால் நின்று போனது சுஜாதாவின் மறைவிற்கு பிறகு இப்போது இந்தத்தொடரில் வெளிவந்த இக்கட்டுரைகள் முதன் முதலாக நூல் வடிவம் பெறுகின்றன அவரது பரந்துபட்ட அக்கறைகளுக்கு இன்னொரு சாட்சியம் இந்த நூல்.