கண்ணதாசன் கதை
கவியரசின் சுயசரிதமான வனவாசத்தில் கவியரசர் தனது வாழ்வின சில பகுதிகளையே எழுதியிருந்தார். அன்னாரின் எனது சுயசரிதம் மற்றும் எனது வசந்த காலங்கள் நூலிலும் சிற்சில பகுதிகளே அவரால் எழுதப் பெற்றன. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்,ஏமாற்றங்கள், துரோகங்கள்,நடக்கமுடியுமா?-இவ்வாறு தமிழ் நெஞ்சங்களை இன்றும் வியக்கவைக்கும் கவியரசரின் வாழ்க்கை அனுபவங்கள்தாம் அவரது ஆயிரக்கணக்கான பாடல்கள், அர்த்தமுள்ள இந்துமதம் முதலான நூல்களாகப் பரிணமித்தன. கவியரசரின் வாழ்ககை எத்தனையோ திருப்பங்கள நிறைந்த - மற்றவர்க்கும் பாடமாக வேண்டிய நிகழ்வுகளும் அமைந்த வாழ்க்கையாகும். எனவே விடுபட்டுப் பேனா நிகழ்வுகள்,பதிவுகள கவிஞரின் பல எழுத்துத் தொகுப்புகளில் இருந்தும்,கவிஞரோடு பழகியவர்களைப் பேட்டி எடுத்தும்,கவியரசரி்ன் புகைப்படங்களைத் தேடி எடுத்தும், சுவை குறையாமல், அன்னாரது வாழ்க்கை வரலாற்றை அழகுத் தமிழில்,மிகுந்த சுவையுடன் இந்நூல் கூறுகின்றது. இந்த வாழ்ககை வரலாற்று நூல், கவியரசின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலாகும்.
கண்ணதாசன் கதை - Product Reviews
No reviews available