கலைஞர் காவியம் (வாலி)
இரண்டு முறை ஆகியும்கூ மீண்டும் ஒரு கட்டத்தில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு கருணாநிதியின் உழைப்புத்தான் காரணம், வளைய வேண்டிய நேரம் எது, திமிர வேண்டிய காலம் எது அடக்கி வாசிக்க வேண்டிய பருவம் எது. குரல் எழுப்பிச் சவால் விட வேண்டிய கட்டம் எது என்பதை யெல்லாம் அனுபவரீதியாக உணர்ந்திருப்பதும் இவருடைய அரசியல் வெற்றிகளுக்கு ஒரு காரணம்.
வனவாசம் போன மாதிரி, தொடர்ந்து பதின் மூன்று வருட காலம் பதவியின் அருகில் கூட நெருங்க முடியாமல் - விசாரணை. வழக்கு ஆகியவற்றைச் சந்தித்துக்கொண்டு பலமான எதிரிகளான எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி போன்ற அவர்களின் அரசியல்களையும் எதிர் கொண்டு குனிந்து, நிமிர்ந்து, குழைந்து, குரல் எழுப்பி பிறகு வெற்றிகளையும் பெற்ற கருணாநிதியின் செயல்பாடு வியக்கவைக்கிற ஒரு தனி மனித சாதனை.
' 'துக்ளக்' ஆசிரியர் சோ