கால்கள்

கால்கள்
சிதைவுற்ற உடல்களாலான உலகிற்கும் ஆரோக்கியமான உடல்களின் உலகத்திற்க்கும் இடையிலான இருவேறு உண்மைகளை இந்நாவல் பேசுகிறது. தன் உடல் பற்றின நினைவும் அதை மீறும் ஆவேசமும் கொண்டவன் இந்நாவலின் மையப் பாத்திரம். வலி எப்படித் தனிமையை, பிரக்ஞையின் பாரத்தைக் கடக்க இலக்கியத்தை விட எளிதாக, இயல்பாக உதவுகிறது என்று சொல்லி, வலி நிரம்பிய வாழ்வு எப்படி ஒரு விடுதலையை தருகிறது என்று சொல்கிறது. மேலும் உடல் பற்றின குற்றவுணர்வு எப்படி மையப்பாத்திரத்துக்கும் குடும்பத்துக்குமான உறவைத் தீர்மானிக்கிறது, அது விலகும் போது அவள் தடுமாறிப் பின் எப்படி மேலெழுகிறார் என்று சித்தரிக்கிறது. வாழ்வை அப்படியே எற்றுக் கொள்பவர்கள், அதை தர்க்கப்படுத்த முயல்பவர்கள் என்று நாவலின் நான்கு பிரதான பாத்திரங்களைப் பிரிக்கலாம். இவர்களின் மோதல் நாவலுக்கு ஒரு இயல்பான நாடகீயத்தை அளிக்கிறது. பரந்துபட்ட ஒரு தளத்தில் வேறுபட்ட பல துணைப்பாத்திரங்கள் நாவலுக்கு ஒரு அபாரமான விரிவையும் எதிர் பாராதத் தன்மையையும், அளிக்கிறது. நுண்மையான அங்கதமும் கவித்துவமான மொழியும் பாசாங்கற்ற சித்தரிப்புகளும் இதை ஒரு சரளமான, சுவராஸ்யமான. தனித்துவமான படைப்பாக்குகிறது.