காக்கித்தடாகத்தில் மலர்ந்த கமலம்
காக்கித்தடாகத்தில் மலர்ந்த கமலம்
அறிஞர் அண்ணா கமலஞர் கருணாநிதி இவர்களுக்குப் பிறகு, எனக்குப் பிடித்த நல்ல தல்ல யசனங்களை எழுதியவர் என் அருமைத் தம்பி ஆதாஸ்தான்! 1958-இல் என் நண்பர் ஜெமினிகணேசன் ஆருதாசை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து இவர் எனக்கு முதன் முதலில் வானம் எழுதிய ‘பாசமலர்’ நான் மறக்க முடியாத படம் எனக்கு அதிகப் படங்களுக்கு எழுதி, சாதனை புரிந்தவர் ஆரூர்தாஸ் ஒருவர்தான். எழுதுவதோடு அல்லாமல், படப்பிடிப்பில் இவர் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதில் திறமை வாயந்தவர். இந்த யானைக்கு இவர் சோளப்பொரி போட்டதில்லை. இந்தச் சிங்கத்திற்கு இவர் என்றைக்கும் அழுகிய
மாமிசத்தை லீசியதில்லை! கடமையில் கண்ணும் கருத்தும், காலந்தாழ்த்தாமையும், கடுமையான உழைப்பும் காரணமாகத்தான்; இவர் ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் கதை திரைக்கதை, வசனம் எழுதி இதுவரையில் வேறு எந்தத் திரைப்பட எழுத்தாளரும் பெறாத `சாதனை நாயகன்' பட்டத்தைப் பெறுகிறார். நான் எப்பொழுதுமே 'ஆரூரான்" என்று அன்புடன் அழைக்கும் தம்பி ஆரூர்தாஸ் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றிப் பல்லாண்டுப் பல்லாண்டு வாழ வேண்டும் என தாயை மன்றாடி வாழ்த்துகின்றேன். “நடிகர் திலகம் சிவாஜிகணேசன்,
காக்கித்தடாகத்தில் மலர்ந்த கமலம் - Product Reviews
No reviews available