ஜான் கென்னடி கொலையானது எப்படி?
ஜான் கென்னடி கொலையானது எப்படி?
அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா? கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா? அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா? மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா? நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது
ஜான் கென்னடி கொலையானது எப்படி? - Product Reviews
No reviews available