ஜனகணமன

ஜனகணமன
காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள அரசியல், சமூகக் காரணங்களை அண்மைக் கால வரலாறு போதிய மட்டும் நமக்கு அளித்து விட்டது. ஆனால் வரலாறு சொல்லத்தவறிய விஷயங்கள் பற்பல. கோட்ஸே எப்படி சிந்தித்தான்? காந்தியைக் கொல்வதென்று முடிவெடுத்த பிறகு அவனது மனநிலை எப்படி இருந்தது? எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படிச் செயல்படுத்தினார்கள்? கோட்ஸே எப்படிப்பட்ட மனிதன்? வெறும் புகைப் படமாகவும் பெயராகவும் மட்டுமே நமக்கு இதுவரை அறிமுகமாகியுள்ள நாதுராம் கோட்ஸே முதல் முறையாக ஒரு மனிதனாக மாலனின் ஜனகணமனவில் நமக்கு அறிமுகமாகின்றான். வரலாறு எங்கே மெடிவடைகிறது, கதை எங்கே தொடங்குகிறது என்று பிரித்துப் பார்க்க ஒரு நொடி அவகாசம் கூட அளிக்காமல் விறுவிறுவென்று இந்நாவலைக் கொண்டு செல்கிறார் மாலன். வெளிவந்த காலகட்டத்தில் ஏராளமான சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருசேரப் பெற்ற இந்நாவல் மாலனின் மிக முக்கியப் படைப்பாக இன்று வரை கொண்டாடப்படுகிறது.