ஜமா இஸ்லாமியா : ஓர் அறிமுகம்
ஜமா என்றால் கூட்டம் அல்லது குழு என்று சொல்லலாம். எளிமையான பொருள்தான். ஆனால் ஜமா இஸ்லாமியாவின் செயல்பாடுகளை, அதற்கான காரணங்களை, அவர்களது நெட் ஒர்க் பலத்தைப் புரிந்துகொள்வது அத்தனை எளிமையானதல்ல. ஒரு தோற்றத்தில் தனியொரு தீவிரவாத இயக்கம் போலவும், இன்னொரு தோற்றத்தில் மிகப்பெரிய இயக்கங்களின் பகுதி நேர ஃப்ராஞ்சைசீஸ் போலவும் தெரியும். எந்தக் காரியத்தைத் தங்கள் சொந்த முடிவின்பேரில் செய்கிறார்கள், எதை அடுத்தவர்களுக்காகச் செய்துகொடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் தொடர்ந்து 'காரியங்கள்' செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில். நம்ப முடியாத அளவுக்கு ஆள் பலம். மிரட்டும் பொருளாதார பலம். உலகில் எந்த ஒரு நவீன ஆயுதம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டாலும் உடனடியாக ஒரு காப்பி இந்தோனேஷியாவுக்கு வந்துவிடும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆயுத பலம். சந்தேகமில்லாமல் ஆசிய நிலப்பரப்பின் அதி தீவிர இயக்கமான ஜமா இஸ்லாமியாவைப் புரிந்துகொள்ளத் தமிழில் உள்ள ஒரே நூல் இதுதான்.