இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்
சேவியர் அவர்கள் எழுதியது.
இயேசு ஒரு மதத்தலைவர் அல்லர். அவர் எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை.தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சார்ந்த யூத குலத்து மக்களின் வாழ்வைச் சீரமைக்கும் பணியைத்தான் அவர் இடைவிடாமல் மேற்கொணடார்.ஒரு வகையில் அவர் ஒரு கலக்காரர்.இன்னும் சொல்வதென்றால் புரட்சிக்காரர். மெளடீகங்களும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கியிருந்த சமூகத்தில் அவரது அமைதிக் குரலே பேரிடியாகத்தான் எதிரொலித்தது.அவரது பகுத்தறிவு காலத்துக் ஒவ்வாததாக குலத் துரோகப் பிரசாரமாகப் பார்க்கப்பட்டது.அவருக்கு எதிர்ப்பாளர்கள் மிகுந்ததும் இறுதியில் மரணதண்டனைக்கு அவர் உள்ளாக்கப்பட்டதும் இதனால்தான். சிலுவையில் அறையப்படட் மூன்றாம் நாள், இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கை.அவரது சிந்தனைகளும் , ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் தத்துவங்களும்கூட அப்போதுதான் உயிர்த்தெழுந்ததாகக் கொள்ள வேண்டும். இயேசுவுக்குப் பிறகுதான் கிறிஸ்தவம் என்னும் புதிய மதக் கோட்பாடு தோன்றியது.மனித குமாரனாகவே தன்னை அறிவித்துக்கொண்ட இயே தேகுமாரனாக முன்னிறுத்தப்பட்டதும் அப்போதுதான். இயேசுவின் வாழ்க்கையை ஒரு மாறுபட்ட கோணத்தில் விறுவிறுப்பாக மறுஅறிமுகம் செய்துவைக்கும் இந்நூல் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் அப்போதைய அரசியல் சமூகப் பின்னணியையும் சேர்த்தே விவரிக்கிறது.