அயர்லாந்தின் போராட்டம் : தேசியமும் சோசலிசமும்
அயர்லாந்தின் போராட்டம் : தேசியமும் சோசலிசமும்
எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதியது. 'ஐரிஷ் பிரச்சனை' என்பது என்ன? " அது ஐரிஷ்காரர்களுகே தெரியாது" என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன்-சற்று எள்ளலாக. அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராதத் திருப்பங்களும் நிரைந்ததுதான் அயர்லான்ந்தின் தேசிய விடுதலை போராட்டம். இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிரகும்கூட அது 'தொடரும் போராட்ட' மாகவே இருக்கக் கூடும். ஒரு பரந்த மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அப்போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல். மார்க்சியத்திற்கும் தேசியத்திற்குமிடையிலுள்ள உறவுகள், முரண்பாடுகள், தேசியத்தின் உள் முரண்பாடுகள், அதன் சறுக்குப் பாறைகள், புதை மணல்கள் ஆகியனவும் சுட்டிக்காட்டப்படுகின்றன. நமக்கு மிக அருகாமையில் நடைபெறும் சில தேசியத்தின் கூறுகள் சில பிரதிபலிப்பதை இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது. வட அயர்லாந்திலுள்ள இன்றைய ஸின்ஃபெய்ன் இயக்கத்தை அனுதாபத்துடன் பார்க்கும் அதே சமயம் அது எதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும் எடுத்துரைக்கிறது.
அயர்லாந்தின் போராட்டம் : தேசியமும் சோசலிசமும் - Product Reviews
No reviews available