இரண்டடுக்கு ஆகாயம்
.
நான்
வானமாகி விட விரும்பினேன் எனக்கு சூரியனும் சந்திரனும் கிடைத்தார்கள்!'
நான்
காற்றாகி விட
விரும்பினேன் உலகம் முழுக்கப்பூக்கள் தங்கள் வாசத்தை என் காலடியில் கொட்டியது!
நான்
ஓடையாகிவிட
விரும்பினேன்
பாறைகள் என்னை மீட்டி இசை உண்டு பண்ணித்
தந்தது!